Friday, December 07, 2007

உத்வேகம்

உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும்!

இதயங்கள் நனைந்தாலும்
இதழ்கள் நகைக்கட்டும்!!

சோதனைகள் பல வந்தாலும்
வேதனைகள் பல தந்தாலும், நண்பா!
உன் வேகம் மட்டும் தொடரட்டும், ஆம்!
உன் உத்வேகம் மட்டும் தொடரட்டும்!!