ராம தூதா
ஆஞ்சநேயா!
ராம் என்று ஒலித்தால்
தாமாக வரும்
அஞ்சனை மைந்தா!!
வானர வீரா
ஆஞ்சநேயா!
வான்புகழ் பெற
வரம் கொடு
அஞ்சனை மைந்தா!!
நினைவில் வைத்து
நிலையாக நிறுத்தினால்
சித்தம் நித்தம் தரும் பரம்பொருளே!!
எண்ணமெலாம் நீக்கமற
நிறைந்திருக்கும் சிரஞ்ஜிவியே!
எமை ஆட்கொளவும்
தயக்கம் ஏனோ?
- சத்யா -
Tuesday, September 30, 2008
நவராத்திரி
இன்பங்கள் தரும் நவராத்திரி!
இன்னல்கள் களையும் நவராத்திரி!
நல்லெண்ணங்கள் தரும் நவராத்திரி!
நலமெலாம் நல்கும் நவராத்திரி!
சங்கடங்கள் அகற்றும் நவராத்திரி!
மங்கலங்கள் அளிக்கும் நவராத்திரி!
சகலகலைகள் தரும் கலைமகள் ராத்திரி!
செலவங்கள் அருளும் அலைமகள் ராத்திரி!
வல்லமைக்கு வித்திடும் மலைமகள் ராத்திரி!
- சத்யா -
இன்னல்கள் களையும் நவராத்திரி!
நல்லெண்ணங்கள் தரும் நவராத்திரி!
நலமெலாம் நல்கும் நவராத்திரி!
சங்கடங்கள் அகற்றும் நவராத்திரி!
மங்கலங்கள் அளிக்கும் நவராத்திரி!
சகலகலைகள் தரும் கலைமகள் ராத்திரி!
செலவங்கள் அருளும் அலைமகள் ராத்திரி!
வல்லமைக்கு வித்திடும் மலைமகள் ராத்திரி!
- சத்யா -
Friday, September 26, 2008
இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!
இதயமே இல்லாத
இயந்திர உலகில்
இதயம் ஈந்து ஓர் உயிருக்கு
உதயம் தந்த இதயக்கனி
இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!
-சத்யா-
இயந்திர உலகில்
இதயம் ஈந்து ஓர் உயிருக்கு
உதயம் தந்த இதயக்கனி
இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!!
-சத்யா-
Wednesday, September 10, 2008
மழை
ஆதித்யன் ஆத்திரம்
தாளாத முகில்கள்
பாய்ந்து அலறி ஓடியது மழையாய்!
சிரித்தது பூமி,
ரசித்தது இயற்கை,
ஆற்றியது காற்று,
அடங்கியது அண்டம்,
முடங்கியது விண்வெளி!!
தாளாத முகில்கள்
பாய்ந்து அலறி ஓடியது மழையாய்!
சிரித்தது பூமி,
ரசித்தது இயற்கை,
ஆற்றியது காற்று,
அடங்கியது அண்டம்,
முடங்கியது விண்வெளி!!
-சத்யா-
வெள்ளித்திரை
வெள்ளைத் திரைக்காவியம்
வண்ணத் திரைக்காவியமாய் மாறியபோதிலும்
வெள்ளித்திரை மட்டும் இன்னும்
வெள்ளைத்திரையாய் இருப்பதும் ஏனோ??
-சத்யா-
சத்யா
Subscribe to:
Posts (Atom)
