Friday, December 12, 2008

காதலி! உன் இதயம்!

வெளியே வந்தால்
உள்ளே செல்லமுடியாது, கருவறை!
உள்ளே சென்றால்
வெளியே வரமுடியாது, கல்லறை!
இருக்கட்டும்,
காதலி!
உன் இதயம் கருவ‌றையா
இல்லை கல்லறையா?
சொல்லிவிடு பைங்கிளி!!
-‍ச‌த்யா-

Thursday, December 11, 2008

தார‌கை!!

கார்முகில்,

கன்னி இவள் வண்ணம்!


பொன்னகை,

பூவை இவள் புன்னகை!


கோவைப்பழம்,

கோதை இவள் கோபம்!


தோகைம‌யில்,

தார‌கை இவ‌ள் த‌ளிர்ந‌டை!

நீள்வானம்

நங்கை இவள் நட்பு!

‍‍-‍சத்யா-‍

தோழியே! துயில் கொள்!

தோழியே! துயில் கொள்!
நீள்வானக் கூரையின்கீழ்,
நட்சத்திரப் பந்தலில்,
வெண்ணிலா துணையிருக்க,
தென்ற‌ல் தாலாட்ட,
ம‌ல‌ர்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்ப,
மங்கையே! துயில் கொள்!!

-‍ ச‌த்யா-