Saturday, August 29, 2009
KAIZEN - தொடர் முன்னேற்றம்
அளக்க முடியாதது வானம்;
அளவிட முடியாதது தாய்ப்பாசம்;
அணையில்லா முன்னேற்றமே
Kaizen முன்னேற்றம்!
முயற்சி திரி போட்டு
ஒற்றுமை நெய் விட்டு
நம் நிறுவனம் நிலைபெற்று தழைக்க
ஏற்றிடுவோம் Kaizen தீபம்!!
-சத்யா-
Sunday, August 23, 2009
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஆட்கொள்ளும் ஐந்து கரத்தானே!
கணப்பொழுதில் கவலைகள்
களையும் கணநாதனே! கணேசனே!!
நம்பிக்கையுடன் நாடுவோருக்கு
நனமை நல்கும் தும்பிக்கையானே!
களிமண்ணுக்கும் "களி" தீர்த்த
கலியுக நாயகனே!
தந்தம் ஒடித்து
பாரதம் தந்த பிரணவ வடிவே!
சதுர்த்தி நாளில் தொழுவோர்க்கு
சங்கடம் தீர்க்கும் ஷண்முகன் சகோதரனே!
உம் தாழ் பணிகின்றோம்
எமைக் காத்தருளும் உமை மைந்தனே!
-சத்யா-
Friday, August 14, 2009
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நம் நிரந்திரப் பயணம் தொடர
'பலகை' மேடை கோஷம் தவிர்த்து
பல'கை'கோர்த்து ஒன்றுபடுவோம்!!
அடக்கி ஆண்ட
அயல்நாடுகளையும் இன்று
முடக்கிப் போடும் நம்
முயல்வேக முன்னேற்றம் தொடரட்டும்!!
-சத்யா-
Monday, July 27, 2009
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பூக்கள் மலர்ந்தது
உன் புன்னகை பார்த்து!
நிலவு ஒளிர்ந்தது
உன் முகம் பார்த்து!
கவிதைகள் கனிந்தது
உன் குரல் கேட்டு!
நட்பு புலர்ந்தது
நம்மைப் பார்த்து!
நம் முகம் பார்த்து
எட்டுத் திங்கள் ஆனபோதும்
அலைபேசி மூலம் நம் எண்ண அலைகள்
எட்டுத் திக்கும் ஆளும்!
சில உறவுகள் புன்னகை போல
என்றாவது தான் உடன் இருக்கும்!
சில உறவுகள் மூச்சைப் போல
எபபவும் உடன் இருக்கும்
நம் நட்பைப் போல!!
உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
- நட்புடன், சத்யா
Tuesday, March 17, 2009
சிகரெட் - ஒரு ஹைக்கூ கவிதை
இருவிரல் நடுவில்
ஒருவிரலாய் ஒளிர்ந்து
கட்டிளம் காளையர் தம்மை
சுண்டி இழுக்கிறாள்
வெண்பட்டு சேலைக்காரி!
-சத்யா-
காதல் கிரிக்கெட் - ஹைக்கூ கவிதை
உன் கண்களின்
"pace bowling"ஆல்
என்னை
"clean bowled"
ஆக்கிவிட்டாய்!
-சத்யா-
புவிவெப்பம்-4
இயற்கை சீற்றம்,
மாறிவரும் தட்பவெப்பம், மற்றும்
பரவிவரும் "புவிவெப்பம்"
- காரணம் யாது?
தம்பி!
திரும்பிப் பார்!
இயற்கையை மிதிப்பவனை
இயற்கையும் மதிப்பதில்லை!
பசுமை கொஞ்சும் வளமே
இயற்கை எழில் நலமே!
மாசு அற்ற சூழலே
நிகர் அற்ற எழிலே
ஓயாது மரங்களின் வேட்டை
"ஓசோன்" மண்டலத்திலோ ஓட்டை!
விஞ்ஞான வளர்ச்சி
சிந்தையின் விந்தைதான்! ஆனாலும்
விளைவுகளின் எழுச்சி
சோதனை தரும் வேதனைதான்!
எந்திர வாகனம் முதல்
இயந்திர நிறுவனம் வரை
எங்கும் "கரியமில"புகை நிறையே
கிரகம் தன்னில் தீராத பகையே!
இளைஞனே!
விரல் கொண்டு
சுருள் பிடிக்கும் விபரீதம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம் செய்யும் துரோகம்!
குரல் ஒன்றுசேர்ந்து
குறள் ஒன்று கொள்வோம்!
"குவளையத்தின் பசுமைதனை
குன்றாமல் காப்பது நம் கடமை என்போம்"!
நண்பா!
நாட்டைக் காப்பது மட்டும்
நம் கடமை அன்று,
நாட்டின் காட்டையும்
காப்பதுவுமே!
சகோதரா!
பசுமையின் செழிப்பில்
வனங்களின் வனப்பில்
"புவி"களம் ஆனது
"எரி"களம் ஆகாமல் காப்போம்!
-சத்யா-
புவிவெப்பம்-3
நவநாகரீக உலகில்
நலிந்து வருவது
உன் ஆடை மட்டுமல்ல இயற்கை
தன் உடையான எழிலும்தான்!
மானுடா!
நம் சுயநலப் போக்கால்
ஓயாது ஓங்கி ஒலித்துவரும்
மரங்களின் மரணஓலம்
"ஓசோன்" தன் எழில்
இழைந்து வரும் நாளும்!
நண்பா!
வருடிவரும் வாடைக்காற்றில்
"கரியமில" வாயு ஆதிக்கம்,
ஆதவனின் வெப்பம் மிஞ்சும்
புவியதனின் தட்பவெப்பம்!
இளைஞனே!
இருவிரல் நடுவில் ஒருவிரலாய்
நாளும் ஒளிர்ந்துவரும் சுருள்புகை
வான்வெளியில் வட்டமிட்டு
வளிதனில் வலியூட்டும் பகை!
எந்திரமயமான இயந்திர உலகில்
சாலை ஊர்திமுதல் வான ஊர்திவரை
சளைக்காமல் உமிழும் நச்சுவாயு தன் துளைப்பால்
சல்லடை ஆகிவருகுது வளிமண்டலம் நாளுமே!
-சத்யா-
புவிவெப்பம் - 2
என்று தணியும் உன் சுயநலத் தாகம்!
அடர்ந்த மரம், ஆர்ப்பரிக்கும் அருவி,
உயர்ந்த மலை, உளம்குளிர் காற்று,
பனித்துளி துயிலும் புல்வெளி,
நளினநடை பயிலும் நதி, என்று
எழில் கொஞ்சும் இயற்கை அன்னை
இன்று தன்னெழில் இழந்து
இழைந்தோடி வருகிறாள்!
நண்பா!
செயற்கை விழைந்து
இயற்கை இழைந்துவரும்
இப்புவிதனில் குவியும் வெப்பம்
நம் செவிதனை நித்தம்
செவிடாக்கும் சேதி என்பது என் ஒப்பம்!
சாலை வாகனம் முதல்
ஆலை நிறுவனம் வரை
கரியமில வாயு ஏற்றமே
புவிதனிலோ வெப்பத்தின் சீற்றமே!
புகை தனில் புன்னகை காணும் மனிதா!
காகிதம் தன் மணம் சொல்லும்
கானகம் தன் கண்ணீர் அவலம்!
மண்வளம் பாராமல்
வனவளம் காக்காமல்
சுழலும் பூமியதன் எழில் போக்கி
சுடுகாடாய் மாற்றுவதும் முறை தானோ?
-சத்யா-
Monday, March 16, 2009
புவிவெப்பம்
புவி வெப்பம்
புரியாத நுட்பம்!
புவி வெப்பம் தனில் ஏற்றம்!
தட்ப வெட்பம் தனிலோ மாற்றம்!
"மீத்தேன்" எனும் சாத்தானால்
மிகுந்து வருகுது புவிவெப்பம்!
இப்படி
சுற்றுச்சூழலில் கேடு
சுழலும்பூமியோ சுடுகாடு!
சகோதரா!
நவநாகரிக உலகில்
"கரியமில" நச்சுப்புகை ஆட்சி
வளிமண்டலம் தன்
வலிமையிலோ வீழ்ச்சி!
தம்பி!
தாள் உபயோகத்தில் தாராளம்
வன வலிமையோ பாதாளம்!
மண்ணில் பிறந்து
மண்ணில் புதையும் மானுடா!
மரம்தனை மாய்த்து
மண்வளம்தனைக் கொய்து
புவிதன்னை ஆவியாக்குவதும் அறம்தானோ??
- சத்யா-
Friday, February 27, 2009
Friday, January 02, 2009
ஆற்றல்
திங்களில் திளைத்து
செவ்வாயில் செழித்து
புதனில் புதைந்து
வியாழனில் விளைந்து
வெள்ளியில் மலர்ந்து
சனியில் ஒழிந்து
புவியில் புலர்ந்தது சக்தி!!
மின்னல் ஒளிக்கீற்றில்
தாலாட்டும் காற்றில்
இடியின் முழக்கத்தில்
நீரோடைத் தேக்கத்தில்
நிலவியிருப்பது சக்தி!
சதோதரா!
இந்திரியம் தீர்ந்துவிட்டால்
சுந்தரியும் பேய்போல்!
இன்றைய இயந்திர உலகின் ஆதாரம்
ஆற்றல் என்கிற அச்சாரம்!
அதனை நாளும் சேமிக்க
இன்றே போடவேணும் அஸ்திவாரம்!
ஆற்றல் என்பது வற்றாத ஜீவநதி!
அதனை வற்றாமல் காப்பதே உலகநியதி!!
நண்பா!
உனக்கு ஆற்றலைச் சேமிக்கும் ஆற்றல்
அல்லாமல் போகலாம்! ஆனால்
அதனை வீணடிக்கும் ஆற்றல்
இல்லாமல் இருந்தாலே போதும்!!
உன்திறமை என்ற ஆற்றல் கொண்டு
இயற்கைப் பசுமை இழையாமல்
ஆற்றல் வளமை வற்றாமல்
வையகம் செழித்திட தாயகம்
தழைத்திடஉறுதிகொள் இக்கணமே!!
ஆம்!
ஆற்றல் வங்கியில் இன்றே
சேமிப்பு கணக்கு துவங்கி
இன்றைய சமுதாயம் ஒளிற
நாளைய தலைமுறை மிளிற
சிக்கனம் எனும் நடவடிக்கை
எடுப்போம் இக்கணமே!!
-சத்யா-
புத்தாண்டு 2009
நண்பா!
சோதனைகள் வந்தாலும் உன்
சாதனைகள் தொடரட்டும்!!
உன்
எண்ணக் கனவுகள்
வண்ண நினைவுகள் ஆகட்டும்!!
பன்னிரு திங்களும்
பன்னீராய்த் திகழட்டும்!
-'2008' நினைவுகளுடன், '2009' கனவுகளுடன்
சத்யா
ஆற்றல் (எ) சக்தி காப்போம் !
அழிக்க முடியாதது ஆற்றல் !
ஆனால்சேமிக்கக் கூடியது ஆற்றல் !
ஞாயிறு ஒளியில் ஒளிந்திருப்பது மின்சக்தி !
அதன் பயன்பாட்டில் இருக்குது நம் யுக்தி !
நீர்வரத்தில் நிரம்பிக் கிடக்குது நீர்சக்தி !
நிலக்கரியில் நிறைந்து இருக்குது எரிசக்தி !
தீப்பொறியில் திளைத்து இருப்பது ஒளிசக்தி !
தென்றலில் தவழ்ந்து கிடப்பது வாயுசக்தி !
அணுவில் அளாவியிருப்பது அணுசக்தி ! இப்படி
பஞ்சபூதங்களில் பரவிக்கிடப்பது சக்தி,
அதற்கு பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மனிதசக்தி !!
நண்பா !
மனிதவளம் மேம்பட, பூமியில்
இயற்கைவளம் அழித்திடல் நியாயமோ ??
உன் காந்த சக்தியால்
பசுமை இழையாமல்
புவியில் ஈர்த்திடு அனைத்து சக்தியை !
பார்வளம் போற்றிட பாரதம் செழித்திட
இன்றே விழ்த்திடு ! ஆம்
"ஆற்றல்" மண்ணில்
"சேமிப்பு" விதையை விதைத்திடு !
ஆற்றல் சேமிப்பில் காட்டிடு "தீவிரவாதம்" ! சேமித்த
ஆற்றலால் ஒழித்திடு தீவிரவாதம் !!
ஆற்றல் மண் செழிக்கும்,
சேமிப்பு விதை விருட்சமாகும் !
நம் வாழ்வு வளம் பெறும் !
நாளைய சமுதாயம் நலம் பெறும் !
-என் கற்பனாசக்தியில் கனிந்த கவிதை-
சத்யா
