Saturday, August 29, 2009

KAIZEN - தொடர் முன்னேற்றம்

அடக்க முடியாதது காற்று;
அளக்க முடியாதது வான‌ம்;
அள‌விட‌ முடியாத‌து தாய்ப்பாச‌ம்;
அணையில்லா முன்னேற்ற‌மே
Kaizen முன்னேற்ற‌ம்!

முய‌ற்சி திரி போட்டு
ஒற்றுமை நெய் விட்டு
ந‌ம் நிறுவ‌ன‌ம் நிலைபெற்று த‌ழைக்க‌
ஏற்றிடுவோம் Kaizen தீபம்!!

-சத்யா-

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

ஆனை வடிவினில் எமை
ஆட்கொள்ளும் ஐந்து கரத்தானே!

கணப்பொழுதில் கவலைகள்
களையும் கண‌நாதனே! கணேசனே!!

நம்பிக்கையுடன் நாடுவோருக்கு
நனமை நல்கும் தும்பிக்கையானே!

களிமண்ணுக்கும் "களி" தீர்த்த‌
கலியுக நாயகனே!

தந்தம் ஒடித்து
பாரதம் தந்த பிரணவ வடிவே!

சதுர்த்தி நாளில் தொழுவோர்க்கு
சங்கடம் தீர்க்கும் ஷண்முகன் சகோதரனே!

உம் தாழ் பணிகின்றோம்
எமைக் காத்தருளும் உமை மைந்தனே!
-சத்யா‍-

Friday, August 14, 2009

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

சுதந்திரம் எனும் பாதையில்
நம் நிரந்திரப் பயணம் தொடர
'பலகை' மேடை கோஷம் தவிர்த்து
பல'கை'கோர்த்து ஒன்றுபடுவோம்!!

அடக்கி ஆண்ட
அயல்நாடுகளையும் இன்று
முடக்கிப் போடும் நம்
முய‌ல்வேக முன்னேற்ற‌ம் தொட‌ர‌ட்டும்!!

-ச‌த்யா-