Tuesday, March 17, 2009

சிகரெட் -‍ ஒரு ஹைக்கூ கவிதை

இருவிரல் நடுவில்

ஒருவிரலாய் ஒளிர்ந்து

கட்டிளம் காளையர் தம்மை

சுண்டி இழுக்கிறாள்

வெண்பட்டு சேலைக்காரி!

‍-‍‍சத்யா-

காதல் கிரிக்கெட் - ஹைக்கூ கவிதை

கண்ணே!

உன் கண்களின்
"pace bowling"ஆல்
என்னை
"clean bowled"
ஆக்கிவிட்டாய்!‍

-‍‍சத்யா-‍

புவிவெப்பம்-4

இயற்கை சீற்றம்,
மாறிவரும் தட்பவெப்பம், மற்றும்
பரவிவரும் "புவிவெப்பம்"
-‍ காரணம் யாது?

தம்பி!

திரும்பிப் பார்!

இயற்கையை மிதிப்பவனை
இயற்கையும் மதிப்பதில்லை!

பசுமை கொஞ்சும் வளமே
இயற்கை எழில் நலமே!
மாசு அற்ற சூழலே
நிகர் அற்ற எழிலே
ஓயாது மரங்களின் வேட்டை
"ஓசோன்" மண்டலத்திலோ ஓட்டை!

விஞ்ஞான வளர்ச்சி
சிந்தையின் விந்தைதான்! ஆனாலும்
விளைவுகளின் எழுச்சி
சோதனை தரும் வேதனைதான்!

எந்திர வாகனம் முதல்
இயந்திர நிறுவனம் வரை
எங்கும் "கரியமில"புகை நிறையே
கிரகம் தன்னில் தீராத பகையே!

இளைஞனே!

விரல் கொண்டு
சுருள் பிடிக்கும் விபரீதம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம் செய்யும் துரோகம்!
குரல் ஒன்று‍சேர்ந்து
குறள் ஒன்று கொள்வோம்!
"குவளையத்தின் பசுமைதனை
குன்றாமல் காப்பது நம் கடமை என்போம்"!

நண்பா!


நாட்டைக் காப்பது மட்டும்
நம் கடமை அன்று,
நாட்டின் காட்டையும்
காப்பதுவுமே!

சகோதரா!

பசுமையின் செழிப்பில்
வனங்களின் வனப்பில்
"புவி"களம் ஆனது
"எரி"களம் ஆகாமல் காப்போம்!

-‍சத்யா‍-

புவிவெப்பம்-3

நங்கையே!

நவநாகரீக உலகில்
நலிந்து வருவது
உன் ஆடை மட்டுமல்ல‌ இயற்கை
தன் உடையான எழிலும்தான்!

மானுடா!

நம் சுயநலப் போக்கால்
ஓயாது ஓங்கி ஒலித்துவரும்
மரங்களின் மரணஓலம்
"ஓசோன்" தன் எழில்
இழைந்து வரும் நாளும்!

நண்பா!

வருடிவரும் வாடைக்காற்றில்
"கரியமில" வாயு ஆதிக்கம்,
ஆதவனின் வெப்பம் மிஞ்சும்
புவியதனின் தட்பவெப்பம்!

இளைஞனே!

இருவிரல் நடுவில் ஒருவிரலாய்
நாளும் ஒளிர்ந்துவரும் சுருள்புகை
வான்வெளியில் வட்டமிட்டு
வளிதனில் வலியூட்டும் பகை!

எந்திரமயமான இயந்திர உலகில்
சாலை ஊர்திமுதல் வான ஊர்திவரை
சளைக்காமல் உமிழும் நச்சுவாயு தன் துளைப்பால்
சல்லடை ஆகிவருகுது வளிமண்டலம் நாளுமே!
-‍சத்யா‍-

புவிவெப்பம் - 2

மனிதா!

என்று தணியும் உன் சுயநலத் தாகம்!

அடர்ந்த மரம், ஆர்ப்பரிக்கும் அருவி,
உயர்ந்த மலை, உளம்குளிர் காற்று,
பனித்துளி துயிலும் புல்வெளி,
நளினநடை பயிலும் நதி, என்று
எழில் கொஞ்சும் இயற்கை அன்னை
இன்று தன்னெழில் இழந்து
இழைந்தோடி வருகிறாள்!

நண்பா!

செயற்கை விழைந்து
இயற்கை இழைந்துவரும்
இப்புவிதனில் குவியும் வெப்பம்
நம் செவிதனை நித்தம்
செவிடாக்கும் சேதி என்பது என் ஒப்பம்!

சாலை வாகனம் முதல்
ஆலை நிறுவனம் வரை
கரியமில வாயு ஏற்றமே
புவிதனிலோ வெப்பத்தின் சீற்றமே!

புகை தனில் புன்னகை காணும் மனிதா!
காகிதம் தன் மணம் சொல்லும்
கானகம் தன் கண்ணீர் அவலம்!

மண்வளம் பாராமல்
வனவளம் காக்காமல்
சுழலும் பூமியதன் எழில் போக்கி
சுடுகாடாய் மாற்றுவதும் முறை தானோ?
-‍சத்யா‍-

Monday, March 16, 2009

புவிவெப்பம்

நண்பா!
புவி வெப்பம்
புரியாத நுட்பம்!
புவி வெப்பம் தனில் ஏற்றம்!
தட்ப வெட்பம் தனிலோ மாற்றம்!
"மீத்தேன்" எனும் சாத்தானால்
மிகுந்து வருகுது புவிவெப்பம்!
இப்படி
சுற்றுச்சூழலில் கேடு
சுழலும்பூமியோ சுடுகாடு!

சகோதரா!
நவநாகரிக உலகில்
"கரியமில" நச்சுப்புகை ஆட்சி
வளிமண்டலம் தன்
வலிமையிலோ வீழ்ச்சி!

தம்பி!
தாள் உபயோகத்தில் தாராளம்
வன வலிமையோ பாதாளம்!

மண்ணில் பிறந்து
மண்ணில் புதையும் மானுடா!
மரம்தனை மாய்த்து
மண்வளம்தனைக் கொய்து
புவிதன்னை ஆவியாக்குவதும் அறம்தானோ??

- ‍ சத்யா‍-