Friday, January 02, 2009

ஆற்றல்

ஞாயிறில் தோன்றி
திங்களில் திளைத்து
செவ்வாயில் செழித்து
புதனில் புதைந்து
வியாழனில் விளைந்து
வெள்ளியில் மலர்ந்து
சனியில் ஒழிந்து
புவியில் புலர்ந்தது சக்தி!!

மின்னல் ஒளிக்கீற்றில்
தாலாட்டும் காற்றில்
இடியின் முழக்கத்தில்
நீரோடைத் தேக்கத்தில்
நிலவியிருப்பது சக்தி!

சதோதரா!
இந்திரியம் தீர்ந்துவிட்டால்
சுந்தரியும் பேய்போல்!
இன்றைய இயந்திர உலகின் ஆதாரம்
ஆற்றல் என்கிற அச்சாரம்!
அதனை நாளும் சேமிக்க‌
இன்றே போடவேணும் அஸ்திவாரம்!

ஆற்றல் என்பது வற்றாத ஜீவநதி!
அதனை வற்றாமல் காப்பதே உலகநியதி!!

நண்பா!
உனக்கு ஆற்றலைச் சேமிக்கும் ஆற்றல்
அல்லாமல் போகலாம்! ஆனால்
அதனை வீணடிக்கும் ஆற்றல்
இல்லாமல் இருந்தாலே போதும்!!

உன்திறமை என்ற ஆற்றல் கொண்டு
இயற்கைப் பசுமை இழையாமல்
ஆற்றல் வளமை வற்றாமல்
வையகம் செழித்திட‌ தாயகம்
தழைத்திட‌உறுதிகொள் இக்கணமே!!
ஆம்!
ஆற்றல் வங்கியில் இன்றே
சேமிப்பு கணக்கு துவங்கி
இன்றைய சமுதாயம் ஒளிற‌
நாளைய தலைமுறை மிளிற‌
சிக்கனம் எனும் நடவடிக்கை
எடுப்போம் இக்கணமே!!
‍-‍சத்யா-

புத்தாண்டு 2009

நண்பா!

சோதனைகள் வந்தாலும் உன்

சாதனைகள் தொடரட்டும்!!

உன்

எண்ணக் கனவுகள்

வண்ண நினைவுகள் ஆகட்டும்!!

பன்னிரு திங்களும்

பன்னீராய்த் திகழட்டும்!

‍-'2008' நினைவுகளுடன், '2009' கனவுகளுடன்

சத்யா

ஆற்ற‌ல் (எ) ச‌க்தி காப்போம் !

ஆக்க முடியாதது ஆற்றல் !
அழிக்க முடியாதது ஆற்றல் !
ஆனால்சேமிக்கக் கூடியது ஆற்றல் !

ஞாயிறு ஒளியில் ஒளிந்திருப்பது மின்சக்தி !
அதன் பயன்பாட்டில் இருக்குது நம் யுக்தி !
நீர்வரத்தில் நிரம்பிக் கிடக்குது நீர்சக்தி !
நிலக்கரியில் நிறைந்து இருக்குது எரிசக்தி !
தீப்பொறியில் திளைத்து இருப்ப‌து ஒளிச‌க்தி !
தென்றலில் த‌வ‌ழ்ந்து கிடப்ப‌து வாயுசக்தி !
அணுவில் அளாவியிருப்ப‌து அணுச‌க்தி ! இப்ப‌டி
பஞ்ச‌பூத‌ங்க‌ளில் ப‌ர‌விக்கிட‌ப்ப‌து ச‌க்தி,
அத‌ற்கு பஞ்ச‌ம் வ‌ராம‌ல் பார்த்துக்கொள்ள‌ வேண்டும் ம‌னித‌ச‌க்தி !!

ந‌ண்பா !
மனித‌வ‌ள‌ம் மேம்ப‌ட‌, பூமியில்
இய‌ற்கைவ‌ள‌ம் அழித்திட‌ல் நியாய‌மோ ??
உன் காந்த‌ ச‌க்தியால்
ப‌சுமை இழையாம‌ல்
புவியில் ஈர்த்திடு அனைத்து ச‌க்தியை !

பார்வ‌ள‌ம் போற்றிட‌ பார‌த‌ம் செழித்திட‌
இன்றே விழ்த்திடு ! ஆம்
"ஆற்ற‌ல்" ம‌ண்ணில்
"சேமிப்பு" விதையை விதைத்திடு !
ஆற்றல் சேமிப்பில் காட்டிடு "தீவிர‌வாத‌ம்" ! சேமித்த
ஆற்ற‌லால் ஒழித்திடு தீவிர‌வாத‌ம் !!
ஆற்ற‌ல் ம‌ண் செழிக்கும்,
சேமிப்பு விதை விருட்ச‌மாகும் !
நம் வாழ்வு வ‌ள‌ம் பெறும் !
நாளைய‌ ச‌முதாய‌ம் ந‌ல‌ம் பெறும் !

-‍என் க‌ற்ப‌னாச‌க்தியில் கனிந்த‌ க‌விதை-
சத்யா