Thursday, June 22, 2006

ஆஞ்ச நேயா!



அஞ்சனை மைந்தா
ஆஞ்ச நேயா!
பஞ்சணையிலும் உன் நினைவே
ஆஞ்ச நேயா!

#
பக்திக்கு இலக்கணம் நீயே
ராம தூதா! எம்
பக்திக்கு இணக்கம் தருவாயே
வானர வீரா!

#
சஞ்சீவிமலை கொணர்ந்த
சிரஞ்சீவீயே! எம்
சஞ்சலம் தீர்ப்பாயே
வாயு புத்திரா!

#
மூலத்தில் பிறந்த
மூலவனே! உன் மூலம்
எமக்கு ராமரருள் கிட்ட
போற்றுகிறேன் முதல்வனே!

#
ஸ்ரீராமநாமம் உச்சரிக்கும்
ஜெய் ஹனுமானே!
ஸ்ரீராமஜெயம் என்றாலே
ஜெயம் தான் ஹனுமானே!

Wednesday, June 21, 2006

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்
இன்று உலக ஸ்டார்!
பல ஸ்டார் மத்தியில்
தனித்து மின்னும் மெகா ஸ்டார்!

சிவாஜி(க்கு) ஒரு
வெள்ளை ரோஜா! இந்த
"சிவாஜி"(யோ) ஒரு
கறுப்பு ரோஜா!

தனி ஸ்டைலால்
தனித்து நிற்கும் "தனிக்காட்டு ராஜா"!
உன் வாழ்க்கை உன் கையில்
என்றுரைத்த "ராஜாதி ராஜா"!
சின்னக் குழைந்தைகளுக்கோ இந்த
"ராஜா சின்ன ரோஜா"!

தனிப்படை கொண்ட "மன்னன்"
எங்கள் "படையப்பா"!
"தங்கமகன்" இவன்
என்றும் எங்கள் "தளபதி"!

பாசம் பொழிவதில்
பாசாங்கு இல்லாத "படிக்காதவன்"!
பாய்ந்து வரும் வெள்ளம் போல்
பகைவரைப் பந்தாடுவதில் "பில்லா"!

சீண்டிப் பார்ப்பவர்களை
அண்டிப் பார்க்கும் "அண்ணாமலை"!
கண்டிப்பாக இவன்
அகிலம் போற்றும் "அருணாச்சலம்"

"ஆறிலிருந்து அறுபது வரை" இவர்
நடிப்பில் ஒரு முத்திரை!
ஆறிலிருந்து அறுபது வரை ப‌லர்
நாடித்துடிப்பில் இவர் நிறை!

"நல்லவனுக்கு நல்லவன்"
இந்த "தர்மத்தின் தலைவன்",
"பொல்லாதவன்" தான், ஆனால்
"நாட்டுக்கு ஒரு நல்லவன்"!

"தில்லுமுல்லு" ஆனாலும் பல
"முள்ளும்மலரும்" தாண்டிய,
எள்ளளவும் கள்ளமில்லாத,
மனிதருள் 'மாணிக்கம்' இந்த "பாட்ஷா"!

ஆன்மீகம் போற்றும்
நம் ‌"பாபா"!
வானவர் போற்ற "சந்திரமுகி"யாய்
பல்லாண்டு வாழிய! வாழியவே!!


நன்றி!! வணக்கம்!!

செல்ஃபோன்

நகரும் தொலைபேசியால்
நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில்
நகரமே நகர்கிறது!!!!

#

காலையில் கண்விழிப்பது
கண்ணாடியில் அல்ல
கண்கவர் நகரும் தொலைபேசியின்
முகப்புக் கண்ணாடியில் தான்!!!

#

"செல்"வம் இல்லாதவன்
ஏழை என்பது போய்
"செல்" இல்லாதவன்
செல்லாதவன் ஆயிற்றே!!!

கமல்

கமல் பற்றி
"கலம்" பற்றி இந்தக்
கவிதைக் களத்தில் நான் எழுதும்
கவிதை

#
பரமக்குடி ஈன்ற
பச்சைத் தமிழன்!!

#
கலைஞன் என்ற சொல்லுக்கு
கலைநயம் தந்த
கலைத்தாயின் தவப்புதல்வன்!!!

#
விருதுகள் பெற பல
எருதுகள் அடக்கும் ஓர்
அரிதான அரிதாரம் பூசும்
அற்புதக் கலைஞன்!!

#
சரசங்கள் பயில்வதில்
சகலகலா வல்லவன்
நவரசங்கள் புரிவதில்
நவரச‌ நாயகன்!!!

#
மூவுலகை ஆள்வது
பஞ்சபூதம்!!!!
கலையுலகை ஆட்கொள்வது
(கமலின்)பஞ்சதந்திரம்!!!

வணக்கம்
சத்யா