
அஞ்சனை மைந்தா
ஆஞ்ச நேயா!
பஞ்சணையிலும் உன் நினைவே
ஆஞ்ச நேயா!
#
பக்திக்கு இலக்கணம் நீயே
ராம தூதா! எம்
பக்திக்கு இணக்கம் தருவாயே
வானர வீரா!
#
சஞ்சீவிமலை கொணர்ந்த
சிரஞ்சீவீயே! எம்
சஞ்சலம் தீர்ப்பாயே
வாயு புத்திரா!
#
மூலத்தில் பிறந்த
மூலவனே! உன் மூலம்
எமக்கு ராமரருள் கிட்ட
போற்றுகிறேன் முதல்வனே!
#
ஸ்ரீராமநாமம் உச்சரிக்கும்
ஜெய் ஹனுமானே!
ஸ்ரீராமஜெயம் என்றாலே
ஜெயம் தான் ஹனுமானே!

1 comment:
என்னவன் மாருதியின்
எழில்தனை நும் தமிழாலே
பண்ணெடுத்து பாடி விட்டீர்
பல்லாண்டு வாழ்க நீவீர்!
Post a Comment