ஞாயிறில் தோன்றி
திங்களில் திளைத்து
செவ்வாயில் செழித்து
புதனில் புதைந்து
வியாழனில் விளைந்து
வெள்ளியில் மலர்ந்து
சனியில் ஒழிந்து
புவியில் புலர்ந்தது சக்தி!!
மின்னல் ஒளிக்கீற்றில்
தாலாட்டும் காற்றில்
இடியின் முழக்கத்தில்
நீரோடைத் தேக்கத்தில்
நிலவியிருப்பது சக்தி!
சதோதரா!
இந்திரியம் தீர்ந்துவிட்டால்
சுந்தரியும் பேய்போல்!
இன்றைய இயந்திர உலகின் ஆதாரம்
ஆற்றல் என்கிற அச்சாரம்!
அதனை நாளும் சேமிக்க
இன்றே போடவேணும் அஸ்திவாரம்!
ஆற்றல் என்பது வற்றாத ஜீவநதி!
அதனை வற்றாமல் காப்பதே உலகநியதி!!
நண்பா!
உனக்கு ஆற்றலைச் சேமிக்கும் ஆற்றல்
அல்லாமல் போகலாம்! ஆனால்
அதனை வீணடிக்கும் ஆற்றல்
இல்லாமல் இருந்தாலே போதும்!!
உன்திறமை என்ற ஆற்றல் கொண்டு
இயற்கைப் பசுமை இழையாமல்
ஆற்றல் வளமை வற்றாமல்
வையகம் செழித்திட தாயகம்
தழைத்திடஉறுதிகொள் இக்கணமே!!
ஆம்!
ஆற்றல் வங்கியில் இன்றே
சேமிப்பு கணக்கு துவங்கி
இன்றைய சமுதாயம் ஒளிற
நாளைய தலைமுறை மிளிற
சிக்கனம் எனும் நடவடிக்கை
எடுப்போம் இக்கணமே!!
-சத்யா-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment