Wednesday, August 17, 2011

2011 சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!!




நெரிசல் இல்லா நெடுஞ்சாலை!
தரிசு இல்லா பசுஞ்சோலை!

தட்டுப்பாடு இல்லா மின்சாரம்!
கட்டுக்கோப்போடு கலாச்சாரம்!

ஒற்றுமை ஒளிர்ந்திடும் இல்லறம்!
ஓங்கி ஒலித்திடும் நல்லறம்!

ஆசான் சொல் வழிநடக்கும் மாணக்கர்!
ஆதாயம் தேடா ஆன்மீகவாதிகள்!

சமத்துவம் போற்றும் சான்றோர்!
சகோதரத்துவம் பேணும் அண்டைநாட்டார்!

ஊழல் இல்லா அரசு ஊழியர்!
ஊருக்கு உழைக்கும் அரசியல்வாதிகள்!

பசி பட்டினி ஒழிந்த சமுதாயம்!
நேர்மை உழைப்பு ஓங்கிய பாரதம்! “

- காலைக் கதிரவன் கலைத்தான் உறக்கம், கனவையும்தான்!

கனவுகள் மெய்ப்பட
ஒன்றுபடுவோம் இந்நாளில்!!

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!!

-சத்யா -

No comments: