Wednesday, June 21, 2006

கமல்

கமல் பற்றி
"கலம்" பற்றி இந்தக்
கவிதைக் களத்தில் நான் எழுதும்
கவிதை

#
பரமக்குடி ஈன்ற
பச்சைத் தமிழன்!!

#
கலைஞன் என்ற சொல்லுக்கு
கலைநயம் தந்த
கலைத்தாயின் தவப்புதல்வன்!!!

#
விருதுகள் பெற பல
எருதுகள் அடக்கும் ஓர்
அரிதான அரிதாரம் பூசும்
அற்புதக் கலைஞன்!!

#
சரசங்கள் பயில்வதில்
சகலகலா வல்லவன்
நவரசங்கள் புரிவதில்
நவரச‌ நாயகன்!!!

#
மூவுலகை ஆள்வது
பஞ்சபூதம்!!!!
கலையுலகை ஆட்கொள்வது
(கமலின்)பஞ்சதந்திரம்!!!

வணக்கம்
சத்யா

1 comment:

NambikkaiRAMA said...

கமல் ரசிகர்கள் இக்கவிதையால் மகிழ்ச்சி அடைவார்கள் :)