Tuesday, September 30, 2008

த‌ய‌க்க‌ம் ஏனோ ப‌ர‌ம்பொருளே!

ராம‌ தூதா
ஆஞ்ச‌நேயா!
ராம் என்று ஒலித்தால்
தாமாக‌ வ‌ரும்
அஞ்ச‌னை மைந்தா!!

வான‌ர‌ வீரா
ஆஞ்ச‌நேயா!
வான்புக‌ழ் பெற‌
வ‌ர‌ம் கொடு
அஞ்ச‌னை மைந்தா!!

நினைவில் வைத்து
நிலையாக‌ நிறுத்தினால்
சித்த‌ம் நித்த‌ம் த‌ரும் ப‌ர‌ம்பொருளே!!

எண்ண‌மெலாம் நீக்க‌ம‌ற‌
நிறைந்திருக்கும் சிர‌ஞ்ஜிவியே!
எமை ஆட்கொள‌வும்
த‌ய‌க்க‌ம் ஏனோ?
- ச‌த்யா -

No comments: