Tuesday, March 17, 2009

புவிவெப்பம்-4

இயற்கை சீற்றம்,
மாறிவரும் தட்பவெப்பம், மற்றும்
பரவிவரும் "புவிவெப்பம்"
-‍ காரணம் யாது?

தம்பி!

திரும்பிப் பார்!

இயற்கையை மிதிப்பவனை
இயற்கையும் மதிப்பதில்லை!

பசுமை கொஞ்சும் வளமே
இயற்கை எழில் நலமே!
மாசு அற்ற சூழலே
நிகர் அற்ற எழிலே
ஓயாது மரங்களின் வேட்டை
"ஓசோன்" மண்டலத்திலோ ஓட்டை!

விஞ்ஞான வளர்ச்சி
சிந்தையின் விந்தைதான்! ஆனாலும்
விளைவுகளின் எழுச்சி
சோதனை தரும் வேதனைதான்!

எந்திர வாகனம் முதல்
இயந்திர நிறுவனம் வரை
எங்கும் "கரியமில"புகை நிறையே
கிரகம் தன்னில் தீராத பகையே!

இளைஞனே!

விரல் கொண்டு
சுருள் பிடிக்கும் விபரீதம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம் செய்யும் துரோகம்!
குரல் ஒன்று‍சேர்ந்து
குறள் ஒன்று கொள்வோம்!
"குவளையத்தின் பசுமைதனை
குன்றாமல் காப்பது நம் கடமை என்போம்"!

நண்பா!


நாட்டைக் காப்பது மட்டும்
நம் கடமை அன்று,
நாட்டின் காட்டையும்
காப்பதுவுமே!

சகோதரா!

பசுமையின் செழிப்பில்
வனங்களின் வனப்பில்
"புவி"களம் ஆனது
"எரி"களம் ஆகாமல் காப்போம்!

-‍சத்யா‍-

No comments: