நங்கையே!
நவநாகரீக உலகில்
நலிந்து வருவது
உன் ஆடை மட்டுமல்ல இயற்கை
தன் உடையான எழிலும்தான்!
மானுடா!
நம் சுயநலப் போக்கால்
ஓயாது ஓங்கி ஒலித்துவரும்
மரங்களின் மரணஓலம்
"ஓசோன்" தன் எழில்
இழைந்து வரும் நாளும்!
நண்பா!
வருடிவரும் வாடைக்காற்றில்
"கரியமில" வாயு ஆதிக்கம்,
ஆதவனின் வெப்பம் மிஞ்சும்
புவியதனின் தட்பவெப்பம்!
இளைஞனே!
இருவிரல் நடுவில் ஒருவிரலாய்
நாளும் ஒளிர்ந்துவரும் சுருள்புகை
வான்வெளியில் வட்டமிட்டு
வளிதனில் வலியூட்டும் பகை!
எந்திரமயமான இயந்திர உலகில்
சாலை ஊர்திமுதல் வான ஊர்திவரை
சளைக்காமல் உமிழும் நச்சுவாயு தன் துளைப்பால்
சல்லடை ஆகிவருகுது வளிமண்டலம் நாளுமே!
-சத்யா-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment