Tuesday, March 17, 2009

புவிவெப்பம் - 2

மனிதா!

என்று தணியும் உன் சுயநலத் தாகம்!

அடர்ந்த மரம், ஆர்ப்பரிக்கும் அருவி,
உயர்ந்த மலை, உளம்குளிர் காற்று,
பனித்துளி துயிலும் புல்வெளி,
நளினநடை பயிலும் நதி, என்று
எழில் கொஞ்சும் இயற்கை அன்னை
இன்று தன்னெழில் இழந்து
இழைந்தோடி வருகிறாள்!

நண்பா!

செயற்கை விழைந்து
இயற்கை இழைந்துவரும்
இப்புவிதனில் குவியும் வெப்பம்
நம் செவிதனை நித்தம்
செவிடாக்கும் சேதி என்பது என் ஒப்பம்!

சாலை வாகனம் முதல்
ஆலை நிறுவனம் வரை
கரியமில வாயு ஏற்றமே
புவிதனிலோ வெப்பத்தின் சீற்றமே!

புகை தனில் புன்னகை காணும் மனிதா!
காகிதம் தன் மணம் சொல்லும்
கானகம் தன் கண்ணீர் அவலம்!

மண்வளம் பாராமல்
வனவளம் காக்காமல்
சுழலும் பூமியதன் எழில் போக்கி
சுடுகாடாய் மாற்றுவதும் முறை தானோ?
-‍சத்யா‍-

No comments: